என்.ஜி.பி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு!

என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் “செயல்படாத சொத்துகளின் மேலாண்மை” எனும் தேசிய அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு என்.ஜி.பி கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தலைமை வகித்தார்.

நிகழ்வில் பங்கேற்ற கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் நிறுவன இயக்குநர் சந்திரசேகர், வங்கிகள் மற்றும் நிதி துறைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக  செயல்படாத சொத்துகள் (Non- Performing Assets) குறிப்பாக இந்திய வங்கி செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

செயல்படாத சொத்துக்களை  உயர்த்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதன் வளர்ச்சிகள் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் தணிக்கை மேலாளர் அரவிந்த் மற்றும் பெண் தொழில்முனைவோர் பிரிவின் மேலாளர் பிரியா ஆகியோர் எடுத்துரைத்தனர்.

கருத்தரங்கில் பங்கேற்ற வெளிமாநில கல்லூரி மாணவர்கள் நிதி துறைகளின் செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் வங்கிகளின் லாபம் தொடர்பான தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர். அதுமட்டுமின்றி, பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் வாயிலாகவும் கருத்தரங்கில் பங்கேற்று பயனடைந்தனர்.

மதிப்பாய்வு அமர்வில் பேசிய எல்.ஐ.சி.தலைமை ஆயுள் காப்பீட்டு ஆலோசகர் கருணாநிதி, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் செயல்படாத சொத்துகளின் வளர்ச்சி மற்றும் செயல்படாத சொத்துக்களை நிர்வகிக்கும் மீட்பு வழிகள் குறித்து எடுத்துரைத்தார்.  கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இதில், வணிகவியல் வங்கி மற்றும் காப்பீடு துறை பிரிவின் தலைவர் ரேவதி, இணைப் பேராசிரியர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள்  பங்கேற்றனர்.