60 செ.மீ உயரம், கிரிக்கெட் உலக கோப்பை -சில சுவாரசிய தகவல்கள்

கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களைக் கவர்ந்த ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இந்திய அணி பறிகொடுத்த போது இந்திய ரசிகர்கள் கண்ணீர் விட்டதைப் பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு  கிரிக்கெட் இந்தியர்களின் உணர்வுகளுடன் கலந்த ஒன்றாகிவிட்டது.

இப்படியாக ஐசிசி உலகக் கோப்பையை உருவாக்குவதற்கான செலவு என்ன? இது எதனால் ஆனது? அனைத்து விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளி மற்றும் தங்கத்தினால் ஆன இந்த கோப்பை 1999 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.

கிரிக்கெட் உலக கோப்பையை வடிவமைத்தவர் கர்ரார்ட் & கோ.வின் பால் மார்ஸ்டன் வடிவமைத்தார். இது லண்டனில் கைவினைஞர்களின் குழுவால் கடினமான முயற்சியில் இரண்டு மாதங்கள் தயாரிக்கப்பட்டது. கோப்பையை தற்போது ஆஷ்போர்டில் ஓட்டே வில் சில்வர்ஸ்மித்ஸ் தயாரிக்கிறார்.

கிரிக்கெட் உலகக் கோப்பையின் வடிவமைப்பில், கோப்பையின் நடுவில் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தங்கக் கோள், மூன்று வெள்ளி முத்திரைகள், மற்றும் ஒரு ஸ்டம்ப்டு விக்கெட் இருக்கும். இதில் சிறப்பம்சம் என்றால்,  பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை முறியடிக்கும் போது உற்சாகமான தருணங்களைப் படம்பிடித்து, காட்டும் வகையில் ஸ்டம்ப்டு விக்கெட் இடம்பெற்றிருப்பது கிரிக்கெட்டின் உணர்வைக் காட்டுகிறது.

60 செ.மீ உயரம் கொண்ட கோப்பையின் ஒட்டுமொத்த எடை 11 கிலோ ஆகும். ஐசிசி உலகக் கோப்பையை உருவாக்க சுமார் 30,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25 லட்சம்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெரும் அணி கோப்பையை நிரந்திரமாக வைத்துக் கொள்ளலாம். அதாவது, நகல் கோப்பையை அவர்கள் வைத்துக் கொள்ளலாம், அசல் கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியிடம் இருக்கிறது.