இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி  திட்டம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் FACEPrep மற்றும் LinkedIn உடன் இணைந்து ,”LinkedIn Career Kickstarter Program” எனும் பயிற்சி  திட்டத்தை அண்மையில் நடத்தினர்.

பயிற்சியில், மாணவர்கள் தங்களிடம் உள்ள மேம்பட்ட திறன்களை லிங்க்ட்இன் இணைய முகப்பு மூலம் வெளிப்படுத்துதல் குறித்த வழிமுறைகள் தெளிவாக வழங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு லிங்க்ட்இன் பிரீமியம் மற்றும் சுமார் 17000 மேலே உள்ள தொழில்முறை படிப்புகள் 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், முதல்வர் ஜெயா, டீன் மகுடீஸ்வரன் ஆகியோர்  கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி திட்ட அலுவலர் ரம்யா செய்திருந்தார்.

மேலும், இப்பயிற்சியில் 2400க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.