புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் கல்வி நிறுவனங்கள் ஆர்வம் 

“காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டுள்ள புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் கல்விநிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன,” என, பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மானிஷ் ஜோஷி தெரிவித்தார்.

கோவை விமானநிலையத்தில் பல்கலைக்குழு மானியக்குழு செயலாளர் மானிஷ் ஜோஷி நிருபர்களிடம் பேசுகையில்; தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், உயர்கல்வி கற்பதில்  மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதில் கல்விநிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

மாணவர்களுக்கு உயர்கல்வி தருவதில் ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.   தற்போது பயின்று வரும் மாணவர்கள், கல்வி முறையில் எளிமையையும், பல்வேறு வகையான வாய்ப்புகளையும், சுதந்திரமாகச் செயல்படும் கல்வி முறை வேண்டும் என்ற நிலையையும் எதிர்பார்க்கின்றனர்.  தற்போதுள்ள கல்வி முறையில்  ஒரு பட்டப்படிப்பிற்கு ஏற்ற வகையில்,  புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றன. மாணவர்கள் இந்த கல்வியோடு, வேறு பாடங்களையும் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இந்த விருப்பத்தை நிறைவேற்ற புதிய கல்விக் கொள்கை உதவுகிறது. மாணவர்களை மையப்படுத்தி இந்த கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த கல்விமுறையில் பொருளாதாரம், இயற்பியல், பொறியியல் வேதியியல், இசை, யோகா என பல்வேறு பாடங்களில் புலமை பெற்றவர்கள் உள்ளனர்.  இந்த கல்வி புலமையை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய கல்வி திட்டம் வழி வகுக்கிறது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்ற கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது.

ஆர்வமுடன் பங்கேற்ற இந்த மாணவர்கள், புதிய கல்வித் திட்டம் பற்றி மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வர். புதிய கல்வித் திட்ட சாரதிகள் என அழைக்கப்படுவர். பாலக்காட்டில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற ஒரு கருத்தரங்கு நடந்தது.