தேர்வு கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலைக்கழகம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை 50% ஆக அதிகரித்துள்ளது.
ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டிய நிலையில், தேர்வு கட்டணமாக  ரூ.2050 செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதே போன்று, டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1000த்தில் இருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும்,  இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்ய ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அதை ரூ.900ஆக உயர்த்தியுள்ளது.
மேலும் 50% கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது  எனவும் உடனடியாக இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.