மீண்டும் அரையிறுதியில் இந்தியா-நியூசிலாந்து!

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி சுற்று மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடந்து வருகிறது.லீக் சுற்றுகள் முடிந்து இறுதிப் போட்டிக்குள் நுழையப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு ஆட்டம் தடைப்பட்டால் “ரிசர்வ் டே” என்ற அடுத்த நாள் போட்டி நடத்தப்படும் என்று ஐசிசி தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து  அணியை 2-ஆவது முறையாக இந்திய அணி எதிர்கொண்டு பலப்பரீட்சை நடத்த உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரையிறுதி  போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. அதன்பின் நடப்பு உலகக் கோப்பையில் (2023) இந்திய அணி 2-வது முறையாக அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பை லீக் தொடரில் 9 ஆட்டங்களில் வென்று 18 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. ஆகையால், இந்தப் போட்டியில் தொடர் வெற்றியை இந்திய அணி பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.