திறமை இருந்தால் சிகரம் தொடலாம்!

தலைசிறந்த பல்கலை, கல்லூரிகளில் படித்தால் தான் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதில்லை. அறிவுடன் கூடிய நுட்ப திறன் இருந்தால் எங்கே படித்தாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இந்தூரை சேர்ந்த சாஹில் அலி என்ற மாணவர்.

மத்தியப் பிரதேசம், இந்தூரில் இயங்கும் மாநில பல்கலைக்கழகத்தின் எம்.டெக் படிக்கும் சாஹில் அலி வகுப்பில் முதல் மாணவன் இல்லை. சராசரியாகப் படிக்கும் மாணவன் தான் என்கிறார் அவரின் வகுப்பு ஆசிரியர்.  தங்கள் துறை சார்ந்த தேடலும், அதில் ஏதேனும் புதுமையை உட்புகுத்த வேண்டும் என்ற தீரா வேட்கையும் கொண்டிருந்தாள் எளிதில் சாதிக்க முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் சாஹில் அலி.

அப்படி என்ன சாதனை படைத்திருக்கிறார் சாஹில் அலி என்ற யோசனையா? நெதர்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அடியனில் பனி நியமன ஆணை பெற்றிருக்கிறார். அதுவும், ஆண்டு வருமானம் ரூ. 1.13 கோடி.

பொதுவாக நம்மில் பலர் ஐ.ஐ. டி, ஐ.ஐ.எம் போன்ற தலைசிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைப் பயின்றால் மட்டுமே அதிக சம்பளத்துடன் சிறந்த நிறுவனங்களில் பணி அமர முடியும் என நினைப்போம். அது முற்றிலும் தவறு. வகுப்பில் முதல் பென்ச் மாணவனோ கடைசி மாணவனோ திறமை இருந்தால் வாய்ப்புகளைத் தனதாக்கிக் கொள்ள முடியும்.