டெல்லியில் செயற்கை மழை!

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகக் காற்றின் மாசு அதிகரித்து வருகிறது. காற்றின் தரக் குறியீடு 400க்கும் அதிகமான புள்ளிகளை எட்டியுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளுக்குக் குளிர்கால விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், காற்றின் தரத்தை அதிகரிக்க வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   இதுமட்டுமின்றி காற்று மாசு தொடர்ந்து அபாயகரமான குறியீட்டில் இருப்பதால் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களும் உடனடியாக பயிர்க் கழிவு எரிப்பதை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் செயற்கை மழை பொழிய வைக்கத் திட்டமிட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். டெல்லி அரசுக்கு ஐஐடி நிபுணர்கள் பரிந்துரை செய்த இந்த திட்டத்தை விரைவில் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று  செயற்கை மழையை உருவாக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறினார்.

மேலும், காற்றில் ஈரப்பதம்  அல்லது மேகங்கள் சூழ்ந்து இருந்தால் காற்றின் மாசு தரக் குறியீடு குறையும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.