ஆசிய பாரா விளையாட்டில் வென்ற முத்து ராஜாவுக்கு பாராட்டு

கங்கா மருத்துவமனையில் முதுகு தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்து மறுவாழ்வு பெற்ற முத்து ராஜா, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்று வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து, கங்கா மருத்துவமனை மற்றும் கோவை மத்திய ரோட்டரி கிளப் சார்பில் அவருக்கு பாராட்டு விழா புதன்கிழமை கங்கா முதுகெலும்பு காயம் மறுவாழ்வு மையத்தில் நடத்தியது.

இந்நிகழ்வில் கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ராஜசேகர், பிசியோதெரபி ஃபேம் க்ளப் நிறுவனர் முருக பிரபு, கோயம்பத்தூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் அஷ்வின் மற்றும் ரோட்டரி சென்ட்ரலின் உறுப்பினர் ரமணி சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.