ரசிகர்களுக்கு சோக செய்தி..!!! பெரும் சிக்கலில் சென்னை மைதானம் …!

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்லி வழக்கறிஞர் அசோக்சக்கரவர்தி சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் BCCI க்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். கள்ள சந்தையில் அதிக விலைக்கு சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார்.

ஆன்லைன் மற்றும் கவுண்டர் டிக்கெட் விற்பனையில் முறைகேடு தொடர்பாக பலதரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பெரும்பாலானவர்கள் டிக்கெட் கிடைக்கவில்லை என சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதை பற்றி தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர், சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனுக்காக டிக்கெட் விற்பனை சார்ந்த முறைகேடு, கள்ள சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது மற்றும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் BCCI மீது வழக்கு தொடுத்துள்ளார்.

சென்னையில் இதற்கு முன்பு நடந்த போட்டிகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சார்ந்த விவரத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது என அசோக்சக்கரவர்தி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞர் வெங்கடேசன் இந்த வழக்கு தொடர்பாக தனது தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் எனவும் அசோக்சக்கரவர்தி தெரிவித்துள்ளார்.

அதோடு சென்னையில் நடைபெற உள்ள playoff சுற்றின் qualifier 1 மற்றும் eliminator போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.