உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் -மேட் ஹென்றி விலகல்

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட ஹென்றி காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 7 ஆட்டங்கள் விளையாடிய நியூசிலாந்து அணி 4 வெற்றிகள், 3 தோல்விகள் என புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. பாக்கிஸ்தான் அணியுடன் நாளை விளையாட உள்ள நிலையில்

வேகப்பந்து வீச்சாளர் மேட ஹென்றிக்கு வலது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஹென்றிக்கு மாற்றாக ஜேமிசன் களம் இறங்குவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து அணையின் முக்கிய வீரர்களான வில்லியம்சன், சாப்மேன், மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம், லோக்கி பெர்குசன் ஆகியோர் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகி இருப்பதால் அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.