ஸ்ரீ அபிராமி மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ வசதி திறப்பு

கோவை குறிச்சி சுந்தராபுரத்தில் உள்ள ஸ்ரீ அபிராமி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. வசதியைச் சமீபத்தில் துவக்கி உள்ளது.

சிறப்பு விருந்தினராக கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கலந்து கொண்டார். நிகழ்வை மருத்துவமனையின் தலைவர் பெரியசுவாமி மற்றும் இயக்குநர்கள் குந்தவிதேவி, உமாதேவி மற்றும் மருத்துவர் பெரியசாமி, டாக்டர் சுச்சரித்தா ஆகியோர் குத்து விளக்கை ஏற்றினர்.

புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியை மருத்துவர் பக்தவத்சலம்   துவக்கி வைத்துப் பேசுகையில், ஸ்ரீ அபிராமி மருத்துவமனை, மக்களுக்கான மருத்துவ சேவையில் சிறந்து விளங்குவதைப் பாராட்டினார். நவீன மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து துல்லியமான நோயறிதல், சிகிச்சை திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவ நிலைமைகளைக் கண்காணிப்பதில் மருத்துவமனையின் பங்கைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும், நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியை மக்களுக்குக் குறைந்த விலையில் வழங்குவது இன்று பலருக்குப் பலன் அளிக்கக் கூடியது என்றார்.

எலும்பு முறிவு நிபுணர் மருத்துவர் பாலமுருகன்  எம்.ஆர்.ஐ. வசதியின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பற்றிப் பங்கேற்றோருக்கு விளக்கினார்.