நவம்பர் 9 ஆம் தேதி லாரிகள் இயங்காது லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் நவம்பர் 9 ஆம் தேதி லாரிகள் இயங்காது என கோவை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கனரக லாரிகள் மீதான 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்,  ஆன்லைன் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், அரசுக்கு சொந்தமான மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும், காலாவதியான 32 சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி கோவையிலும் நவம்பர் 9 ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் அனைத்து லாரி உரிமையாளர்  சங்கங்கள், சிறிய வாகன உரிமையாளர்கள், இலகுரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.