சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி கூடைப்பந்து போட்டியில் அசத்தல் வெற்றி

கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகளுக்கிடையிலான 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, வெற்றிபெற்று ஒட்டுமொத்த சான்பியன் பட்டத்தை வென்றது.

ஜி.டி.பள்ளியில் நடைபெற்ற இந்த கூடைப்பந்து தொடரில் நாக் அவுட் முறையில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தது. புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிகளில் விளையாட சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணிகள் தேர்வு பெற்றன.

பின்பு நடந்த இறுதிப்போட்டியில் 14 வயதிற்குட்பட்டோருக்கான மாணவர் பிரிவில் , பி.எஸ்.ஜி பள்ளியை 28-4 புள்ளி கணக்கிலும், மாணவியர் பிரிவில்  யுவபாரதி பள்ளியை 14-4 புள்ளி கணக்கிலும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி வென்றது.

17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் மாணவ மாணவியர் என பிரிவிலும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி, யுவபாரதி பள்ளியோடு மோதியது. அதிலும் மாணவர் பிரிவில் 23-5 என்ற புள்ளியிலும், மாணவியர் பிரிவில் 30-6 என்ற புள்ளியிலும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அசத்தலாக வெற்றி பெற்றது.

மேலும் 19 வயதிற்குட்பட்டோருக்கான மாணவர் பிரிவில் பி.எஸ்.ஜி பள்ளியை 18-6 புள்ளி கணக்கிலும், மாணவியர் பிரிவில்  கேம்ஃபோர்டு பள்ளியை 26-2 என்ற கணக்கிலும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி வென்று ஒட்டுமொத்த சான்பியன் பட்டத்தையும் தனதாக்கி உள்ளது.

வெற்றி பெற்ற அணியினருக்கு, ஜி.டி.பள்ளி முதல்வர் தீபா மேனன் சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினார். மேலும்  சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலர்கவிதாசன்,ஆலோசகர் கணேசன், முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல்,  கூடைப்பந்து பயிற்றுனர் பாலமுருகன் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.