பி.எஸ்.ஜி தொடக்கப்பள்ளியில் 80ம் ஆண்டு முத்து விழா

கோவை, பி.எஸ்.ஜி அறநிலையத்தின் கீழ் செயல்படும் பி.எஸ்.ஜி தொடக்கப்பள்ளியில் 80ம் ஆண்டு முத்து விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளியின் செயலர் நந்தகோபாலன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின்  தலைமையாசிரியை சந்திரகலா ஆண்டறிக்கை வாசித்தார். பி.எஸ்.ஜி அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையுரை வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் குழு உறுப்பினர் ஷோபனா குமார் கலந்துகொண்டார். எஸ்.எஸ். குளம் வட்டாரக் கல்வி அலுவலர் எம்.ரமேஷ் பாபு  வாழ்த்துரை வழங்கினார்.

ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளியில் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள்  ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.