நாயகன் மீண்டும் வரார் ! நாயகன் ரீரிலீஸ் எப்போது ?

இன்றுள்ள பல இயக்குநர்களுக்கு இன்ஸ்பரேஷன் ஆக இருக்கும்  ‘நாயகன்’ திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘நாயகன்’ இப்படம் வெளியாகி  தற்போது 38 வருடங்கள் ஆகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். சரண்யா இந்தப் படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார்.  டெல்லி கணேஷ், ஜனகராஜ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வேலு நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமல்ஹாசனுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதோடு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கும் , கலை இயக்குநர் தோட்டா தரணிக்கும் இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது.

தமிழ் சினிமாவில் இன்றளவும் பேசப்படும்  ‘நாயகன்’ திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 3 யில் டிஜிட்டலில் மீண்டும் வெளியாக உள்ளது.