கே.கே.வி. நிறுவன தயாரிப்பாளர் டி.கே.சந்திரனுக்கு தேசிய விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

கே.கே.வி. நிறுவனம் தயாரித்த “சிற்பிகளின் சிற்பங்கள்” ஆவணப்படத்திற்காகத் தயாரிப்பாளர் டி.கே.சந்திரனுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருதை வழங்கினார்.

இந்திய அரசு ஆண்டு தோறும்  பல்வேறு மொழிகளில் வெளியான மிகச்  சிறந்த திரைப்படங்களுக்குத் தேசிய விருது வழங்கி திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கே.கே.வி மீடியா வென்ச்சர் தயாரிப்பில் உருவான “சிற்பிகளின் சிற்பங்கள்” என்ற ஆவணப்படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

61 ஆண்டுகளுக்கு மேலாக மிகப்பெரிய தொழில் நிறுவனமாக திகழும் கே.கே.வி குழுமம் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று.  தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, எஸ்.சி.எம் கார்மெண்ட்ஸ் அண்ட் ஸ்பின்னர்ஸ் உட்பட பல முக்கிய பிராண்டு நிறுவனங்கள் கே.கே.வி குழுமத்தின் அங்கங்களாக இருக்கின்றன. இந்த வரிசையில் கே.கே.வி மீடியா வென்ச்சர் என்ற தயாரிப்பு நிறுவனம் இணைந்தது.

இந்நிலையில் 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதில், கே.கே.வி மீடியா வென்ச்சர் சார்பில் தயாரிக்கப்பட்ட “சிற்பிகளின் சிற்பங்கள்” என்ற ஆவணப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் 69 ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்கிழமை நடந்தது. விருந்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கினார். அந்த வகையில், கே.கே.வி. நிறுவனம் தயாரித்த “சிற்பிகளின் சிற்பங்கள்” ஆவணப்படத்திற்காகத் தயாரிப்பாளர் டி.கே.சந்திரனுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருதை வழங்கினார்.