இந்துஸ்தான் கல்லூரி சார்பில் உலக தண்ணீர் தினம் குறித்த கருத்தரங்கு

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் வேதிப் பொறியியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து  உலக தண்ணீர் தினம் பற்றிய கருத்தரங்கை திங்களன்று  கங்கா கலையரங்கத்தில் நடத்தின.

இக்கருத்தரங்கில் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ஜெயா தலைமை வகித்ததோடு தண்ணீரின் முக்கியத்துவத்தை குறித்து  விளக்கினார். மேலும் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் பயோடெக்னாலஜி துறை உதவி பேராசிரியர் மணிமாறன் மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் உணவு தொழில்நுட்பத் துறைத்தலைவர் பூஜிதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை வழங்கினர்.

அதோடு இந்துஸ்தான் கல்லூரியின் டீன்  மகுடேஸ்வரன் மற்றும் வேதிப் பொறியியல் துறைத்தலைவர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.