முதுகெலும்பு வலியைத் தீர்க்கும் சில தீர்வுகள்!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி, உலக முதுகெலும்பு தினம் கொண்டாடப்படுகிறது. மனித உடலின் மைய ஆதரவு அமைப்பாக செயல்படுவது நம் முதுகெலும்பு.  நமது அன்றாட வாழ்க்கை முறையின் நல்வாழ்வு நமது முதுகெலும்பின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அமைகிறது. அதன் வகையில், முதுகுத்தண்டினால் உட்காருதல், நிற்பது, நடப்பது மற்றும் வளைத்தல் போன்ற அடிப்படை செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.

மாறிவரும் நம் வாழ்க்கை முறைகளுக்கு மத்தியில் நல்ல முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேற்கொள்வது குறித்து  எலும்பியல் தலைமை ஆலோசகர் டாக்டர்  ரெக்ஸ் கூறியுள்ள சில வழிமுறைகளைப் பற்றி இங்கே காண்போம்!

இளைஞர்களிடமே அதிக பாதிப்பு !

விலங்குகள் அனைத்தும் நான்கு கால்களில் நடக்கின்றன, ஆனால் மனிதர்களாகிய நாம் இரண்டு கால்களுடன் நேராக நடக்கிறோம். இதனால் நம் முதுகெலும்புகளுக்கு அதிகப் பாதிப்புகள் ஏற்படுத்துகிறது. முதுகு பிரச்சனையானது வயதானவர்களை மட்டும் பாதிக்கும் என சொல்வதையும் தாண்டி தற்போது இளைஞர்கள் மத்தியிலும் முதுகு வலி என்பது அதிகரித்து வருகிறது. அதன்வகையில் 90% மக்கள் கழுத்து வலி மற்றும் முதுகுவலி என்று பதற்றமடைந்த மருத்துவமனையை அணுகுகின்றனர்.

Neck Pain: 5 Possible Causes Behind This Annoying Issue | SELF

இதில் பெரும்பாலான இளைஞர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. உட்கார்ந்த நிலையில் வேலைகளைச் செய்பவர்கள், கணிணி முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் போன்ற செயல்களினால் நம் தசைகள் இருக்கமாகி, முதுகில் வலிகள் ஏற்படுகிறது. ஆனால் இம்மாதிரியான வலிகளைச் சில முறையான உடற்பயிற்சியின் மூலம் சுலபமாக தவிர்த்து விடலாம்.

சரியான நிலை :

உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு  முதுகெலும்பு மற்றும் முதுகெலும்பு தசைகளின் மீது ஏற்படும் அழுத்தம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அதிக வலியை உண்டாக்குகிறது. இதனால் அவர்கள் எளிதில் சோர்வடைந்துவிடுவர். அதற்கு இருக்கைகளில் சிறிய தலையணையை வைத்து முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்காத வகையில் அமர்ந்து கொள்ளலாம்.

இடைவெளி அவசியம் :

ஒரே நிலையில் அமர்ந்தவாறு பணியாற்றுபவர்கள், அடிக்கடி சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். இடைவெளியின் போது கை, கால் மற்றும் இடுப்புப் பகுதிகளுக்கு சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால், மன அழுத்தம் குறைவதோடு, முதுகெலும்புகளின் மீது ஏற்பட்ட அழுத்தங்களும் குறைய உதவுகிறது.

The 8 Best Lumbar Support Pillows of 2023, Tested and Reviewed

உடற்பயிற்சி :

உட்கார்ந்த நிலையில் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு  இடும்பு மற்றும் முதுகெலும்பின் தசைகள் பலவீனமடைகின்றன. அதற்கு, வேலை நேரங்களில் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக சென்று வலியைக் குறைக்கிறது. மேலும், வயதானவர்கள் சூரிய ஒளி உடம்பில் தாக்கும் வகையில் குறைந்தது அரை மணிநேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால்  முதுகெலும்பு வலிமையாவதுடன், தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கின்றன.

உணவுமுறை 

கொழுப்பு நிறைந்த உணவுகளால் உடல் எடையை அதிகரித்து, தசை எலும்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முதுகு வலி இருப்பவர்கள் முறையான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும், கால்சியம் ஊட்டச்சத்து, அத்தியாவசியத் தாதுக்கள் நிறைந்த உணவு, குறைந்த கொழுப்பு நிறைந்த உணவுகள், புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.

எனவே, மேற்கொண்ட வழிகளை நம் வாழ்நாளில் முறையாகப் பின்பற்றி வருவதனால் வாழ்வின் இறுதி காலம் வரை முதுகெலும்பை வலுவாகப் பாதுகாத்து வலிமையாகச் செயல்படமுடியும்.