காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் கோவையில் துவக்கம் 

சாய் சில்க்ஸ் கலா மந்திர்-ன் காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் தனது 55வது விற்பணையகத்தை ரேஸ் கோர்ஸ் பகுதியில் துவங்கியது.

இதனுடைய துவக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் துவக்கி வைத்து விற்பனையாகத்தில் உள்ள உயர்தர வடிவமைப்புகள் கொண்ட பனாரசி, காஞ்சிபுரம், பட்டோலா, ஐகாட், ஆர்கன்சா மற்றும் குப்பம் வகை சேலைகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் முதன்மை நிர்வாக இயக்குனர் பிரசாத் சாலவாடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.