இந்துஸ்தான் கல்லூரி ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கு சர்வதேச பதக்கங்கள் !

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவாற்றல் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையை சேர்ந்த மாணவர்கள் சர்வதேச அளவிலான ஆராய்ச்சி கண்காட்சியில் மூன்று தங்க பதக்கங்களையும், மூன்று வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

அண்மையில் மலேஷியா மல்டிமீடியா பல்கலைக்கழகம் சார்பில்  சர்வதேச அளவிலான ஆராய்ச்சி கண்காட்சி நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். இந்தக்கண்காட்சியில் இந்துஸ்தான் கல்லூரியின் கணினி அறிவாற்றல் துறை தலைவர் சசிகலா மற்றும் துணை பேராசிரியர்கள்  தீபிகா, சரண்யா, பிரியதர்சினி, ஜெயக்குமார், கவிப்பிரியா மற்றும் சுமதி ஆகியோர் இளங்கலை மாணவர்களோடு இணைந்து கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்து வெற்றி பெற்றுள்ளனர்.

இந்துஸ்தான் கல்லூரி நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா சதிஷ் பிரபு, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.