இலங்கைக்குச் செல்லும் கப்பல் தயார்!

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்குப் பயணிகளுக்கான கப்பல் சேவை  வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. அதற்கான சோதனை ஓட்டம்  பயணிகள் யாரும் இல்லாத முறையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

அதன் வகையில் இதற்கான கட்டண தொகை ஒரு நபருக்கு  ரூ.6,500 மற்றும் 18 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி சேர்த்து 7,670 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்று மணி நேரத்தில், காங்கேசன் துறை சென்றடையும் கப்பல், அதேநாளில் மீண்டும் திரும்பும் வகையில் இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பயணிக்கும் பயணிகள் ஒருவருக்கு   50 கிலோ எடையுள்ள பொருட்கள் இலவசமாக எடுத்துச்  செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இத்துடன் விசா மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் வடகிழக்கு மழை தொடக்கவுள்ளதால் அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே கப்பல் இயக்கப்பட உள்ளதாகவும் அதன் பிறகு மார்ச் மாதத்திலிருந்து  தொடர்ந்து இயக்கப்படுவதாகவும்  இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது.