இந்துஸ்தான் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ச்சி

பள்ளிக்கல்வி துறை சார்பில் 64  வது குடியரசு  தின விளையாட்டு போட்டிகள் கிழக்கு குறுமைய அளவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதில் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர் .

14 ,17 ,19 வயது  பிரிவுகளில் ஹாக்கி ,கால்பந்து ,மேஜைப்பந்து, இறகுப்பந்து, சதுரங்கம் , சிலம்பம் , நீச்சல் ,கபடி ,கராத்தே ,போன்ற போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்று  இந்துஸ்தான் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில் வெற்றிபெற்ற மாணவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாணவர்களை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன்,  இந்துஸ்தான் கல்வி  நிறுவன செயலர் பிரியா, இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி, உடற்கல்வி இயக்குநர் சாலமோன் ஆகியோர் வாழ்த்தினர்.