எஸ்.என்.எஸ் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு

எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி, எஸ்.என்.எஸ் ஐ-இன்நோவேஷன் ஹப் மற்றும் ஜெட் ஏரோஸ்பேஸ் ஏவியேஷன் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ட்ரோன் தொழில்நுட்ப திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோருக்கான பயிற்சி வகுப்பை 5 நாட்கள் நடத்தியது.

ட்ரோன் வடிவமைப்பின் நுணுக்கங்கள், சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பயிற்சி அளித்து மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த வகுப்பு நடத்தப்பட்டது. இது  ஐ.ஐ.டி டெல்லியின் ஐ.ஹச்.எஃப்.சி தொழில்நுட்ப மையத்தால் ஆதரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.

எஸ்.என்.எஸ் ஐ-ஹப் இன்னோவேட்டர்  கண்மணி, எஸ்.என்.எஸ்.சி.டி  தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் அனிதா ஆகியோர் இந்த பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்தனர். இதில் 63 மாணவர்கள் கலந்துகொண்டதோடு அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.