கே.ஜி மருத்துவமனை நடத்தும் சைக்ளோத்தான்

கே.ஜி மருத்துவமனை சார்பில் உலக இதய தினத்தை முன்னிட்டு வருகின்ற 23 ஆம் தேதி சைக்ளோத்தான் நடைபெற உள்ளது.பொதுமக்களுக்கு இதயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

கே.ஜி மருத்துவமனைமனையில் தொடங்கும் இந்த சைக்ளோத்தான் ரேஸ் கோர்ஸ், வருமான வரி துறை அலுவலகம் வழியாக மீண்டும் கே.ஜி மருத்துவமனை அடையுமாறு சுமார் 5 கிலோமீட்டர் வரை நடைபெறவுள்ளது.

 

இந்த சைக்ளோத்தானில் கலந்துகொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்,கேப்,டீஷர்ட் முதலியன வழங்கப்படவுள்ளன. மேலும் முதலில் பதிவு செய்யும் 100 நபர்களுக்கு மட்டும் போட்டிக்கான மிதிவண்டியும் வழங்கப்படும். இதற்கான பதிவு 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.