சோடியன் எனர்ஜி நிறுவனம் சார்பில் சோடியம் அயன் பேட்டரிகள் விரைவில் அறிமுகம்

சோடியம் அயன் பேட்டரிகள் (நா-அயன் பேட்டரிகள்) உற்பத்தியில் நிறுவனமாக திகழும் சோடியன் எனர்ஜி நிறுவனம், பாரம்பரிய வாகனங்களை மின்சார வாகனங்களாக முன்னணி பெட்ரோல் மாற்றுவதற்கான புதுமையான தொழில்நுட்பங்களை வழங்குவதில் முன்னோடி நிறுவனமாக திகழும் ஏஆர்4 டெக் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் சோடியம் அயன் பேட்டரிகளை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பரந்து விரிந்த செயல்பாடுகளைக் கொண்டுள்ள ஏஆர்4 டெக் நிறுவனத்துடன் சோடியன் எனர்ஜி நிறுவனம் இணைந்து பாதுகாப்பான, நம்பகமான மற்றும் குறைந்த விலையில் பேட்டரிகளை விற்பனை செய்ய விவசாய குறைந்த விலையில் இருப்பதோடு உபகரணங்கள் மற்றும் வணிக மின்சார மயமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

மேலும் வாகனங்களை சோடியன் எனர்ஜி நிறுவனத்தின் முதன்மையான வினியோகஸ்தராக, ஏஆர்4 டெக்
நிறுவனம் இந்தியாவில் உள்ள போக்குவரத்து மற்றும் ஆற்றல் சேமிப்பு சந்தைகள் மற்றும் ஏற்றுமதிக்கான தயாரிப்புகளை உருவாக்கும்.

இது குறித்து சோடியன் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாலா பச்சைப்பா கூறுகையில், சோடியம் அயன் பேட்டரிகள் மற்ற வகை பேட்டரிகளை விடப் பாதுகாப்பு, குறைந்த
விலை மற்றும் நீண்ட ஆயுட்காலம் உட்பட பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளன.பெரிய மேடுகளில் ஏறும் வாகனங்கள், அதிக சுமைகளைக் கொண்டு செல்லும் மின்சார வாகனங்களுக்கு வேகமான சார்ஜிங் மற்றும் அதிக டிஸ்சார்ஜ் விகிதங்கள் மற்றும் பெட்ரோல் தேவைப்படுகின்றன. அதற்கு இந்த பேட்டரிகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.பேக்கப் பவர் சப்ளை, சோலார் எனர்ஜி ஸ்டோரேஜ்
வாகனங்களுக்கான ஸ்டார்டர் பேட்டரிகள் போன்றவற்றிற்கும் இந்த சோடியம் அயன் பேட்டரிகள் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, ஏஆர்4 டெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மகேஷ் பாண்டி கூறுகையில், விலை மற்றும் சந்தை தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் லீட் ஆசிட் பேட்டரிகளுக்கு மாற்றாக புதிய தேவைகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். அந்த வகையில் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் இந்தியச் சந்தையில்
லித்தியம் அயன் பேட்டரிகளைவிட இது சிறப்பானதொரு இடத்தை பிடிக்கும் என்று
தெரிவித்தார். மேலும் இந்த பேட்டரிகள் இன்னும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இதன் தொழில்நுட்பம்
இருப்பதோடு, இளமையாக இருப்பதால், இந்தியச் சந்தையில் சிறப்பானதொரு இடத்தை பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

சோடியம் அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் நடவடிக்கையில் ஏஆர்4 டெக் நிறுவனம் தீவிரமாக இறங்கி உள்ளது. நடவடிக்கையிலும் சோடியன் எனர்ஜி மற்றும் ஏஆர்4 டெக் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்தியாவிற்கான தூய்மையான, பசுமையான எதிர்காலத்திற்கான முன்னோக்கிய பயணத்திற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளன. மாசுபாட்டைக் குறைக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், அனைவருக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும் உதவும் சமீபத்திய மற்றும் மிகவும் நிலையான பேட்டரி தொழில்நுட்ப தேவையை இந்த நிறுவனங்கள் பூர்த்தி செய்யும்.