உலகத்தரத்துடன்  சேவையாற்றும் கே.எம்.சி.ஹெச். நரம்பியல் துறை – அருண் பழனிசாமி 

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை மற்றும் கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரி சார்பில் இளம் நரம்பியல் மருத்துவர்களுக்கான முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை குறித்து இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பொதுவான முதுகுத்தண்டுவட பிரச்னைகளை சரிசெய்வதற்குப் பயிற்சி பெற்ற திறமையான நிபுணர்கள் தேவை. எண்டோஸ்கோப்பி அறுவைசிகிச்சை, நுண்துளை அறுவைசிகிச்சை ஆகியவற்றில் இளம் வயதிலேயே பயிற்சி பெறுவது என்பது அவர்களை எதிர்காலத்தில் அத்துறையில் சிறந்து விளங்கச் செய்யும் என்பதற்காக நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பில், டாக்டர் பார்த்திபன், டாக்டர் கோமல் பிரசாத் (பெங்களூரு), டாக்டர் கிருஷ்ணகுமார் (திருவனந்தபுரம்), டாக்டர் விவேக் ஜோசப் (வேலூர்), டாக்டர் வினு வி.கோபால் (கோட்டயம்), டாக்டர் ஜெயேஷ் சர்தரா (மும்பை) ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

 

பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்த கே.எம்.சி.ஹெச். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி, ‘இதுபோன்ற பயிற்சிகளுக்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய இந்திய நரம்பியல் கழகத்திற்கு நன்றி’ என்றார்.

கே.எம்.சி.ஹெச். செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி பேசுகையில், நரம்பியல் அறுவைசிகிச்சைக் கூடங்களின் உட்கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் 4K 3D மைக்ரோஸ்கோபி, எண்டோஸ்கோபி, நேவிகேஷன் சிஸ்டம், 3D C-Arm முதலான அதிநவீன மருத்துவக் கருவிகளின் பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

இந்திய நரம்பியல் கழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வினு வி.கோபால் கல்வி போர்டு எடுத்துவரும் கல்வி தொடர்பான செயல்பாடுகளை விளக்கினர். நாடு முழுவதிலும் இருந்து 60-க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள் பங்கேற்றனர்.