இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய அளவிலான பயிலரங்கு

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பில் கலினரி பிளேட் பிரசன்டேசன் நுணுக்கங்கள் குறித்து தேசிய அளவிலான ஒரு நாள் பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஊட்டி ஐ.டி.சி ஹோட்டல் உறுப்பினர் மற்றும் பார்ச்சூன் சுல்லிவன் கோர்ட்டின் கிச்சன் எக்ஸிகியூட்டிவ், ஜெய்கனேஷ் மற்றும் சென்னை ரேடிசன் ப்ளூ ஜிஆர்டியில் செஃப் டி பார்ட்டி பிரசாந்த் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

இப்பயிலரங்கானது பல்வேறு விதங்களில் உணவு முறை பரிமாறுதல் (பிளேட் பிரசன்டேசன்) குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் நட்சத்திர ஹோட்டல்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறப் பயனுள்ளதாக அமைகிறது.

இதில் கேரளா, கர்நாடகா மற்றும் கோவை போன்ற பல்வேறு இடங்களிலிருந்து 60திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, துறைத்தலைவர் பிரேம்கண்ணா, ஒருங்கிணைப்பாளர் செஃப் செபாஸ்டின் ஷால்வின் மற்றும் துறைப் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.