6 மாத குழந்தையுடன் அமைச்சர் சிவசங்கர் காலில் விழுந்த ஓட்டுநர்

கோவையில் இருந்து தேனிக்கு பணி மாறுதல் வழங்கக்கோரி 6 மாத குழந்தையுடன், அமைச்சர் சிவசங்கர் காலில் விழுந்த ஓட்டுநர் விவகாரம்.

டெங்கு பாதிப்பால் மனைவி உயிரிழந்த காரணத்தால், சொந்த ஊருக்கு பணி மாறுதல் வழங்க கோரிக்கை வைத்துள்ளார். முதல்வர் உத்தரவின் பேரில் தேனிக்கு ஒட்டுனர் கண்ணன் பணி மாறுதலுக்கான உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனி சென்ற கண்ணன் நாளை கோவை கிளையில் அதற்கான உத்தரவு நகலை பெறுகிறார்.