டாடா ஏஐஜி நிறுவனத்தின் புதிய பயணக் காப்பீட்டுத் திட்டம்  அறிமுகம்

ஒரு முன்னணி பொதுக் காப்பீடு வழங்குநரான டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், “டிராவல் கார்டு பிளஸ்” என்ற பயணிகளுக்கான ஒரு முழுமையான பயணக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொகுப்பு திட்டங்களின் ஒரு வரிசையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா ஏஐஜி இன் டிராவல் கார்ட் பிளஸ் ஆனது, வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய 41 வேறுபட்ட விதமான காப்புகள் தொகுக்கப்பட்டுள்ள ஒரு பரந்த வரம்பிலான திட்டங்களுடன் மக்களின் பலதரப்பட்ட பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா ஏஐஜி இன் டிராவல் கார்ட் பிளஸ், தனிப்பட்ட சாமான்களை இழத்தல், உடன் இருந்து கவனிப்பவர் பயணம் / தங்குதல், தங்குமிடம் நீட்டிப்பு, வணிக வகுப்பிற்குத் தரம் உயர்த்துதல், இந்தியாவில் தனிநபர் விபத்து மற்றும் நிகழ் நேர அடிப்படையில் ஏதேனும் விமான தாமதங்கள் அல்லது ரத்து செய்யப்படுதல் ஏற்பட்டால் பயணிகள் உடனடி பணம் பெற அனுமதிக்கின்ற உடனடி நிறைவேற்றம் போன்ற பல்வேறு சூழ்நிலைகளின் ஒரு வரம்பிற்குக் காப்பை வழங்குகிறது.

பயணிகள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விரிவான கவரேஜை உரிமை கோரல்களின் எளிமையுடன் அணுகுவதை உறுதிசெய்கின்ற வகையில் இந்த மேம்பாடுகள் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை உயர்த்துவதையும் மற்றும் ஒரு பயணப் பாதுகாப்பில் புதிய தரநிலைகளை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. பல தயாரிப்பு மேம்பாடுகள் மத்தியில், ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால் அது திட்டங்களின் தனிப்பயனாக்கும் ஆகும். பயணம் தொடர்பான எதிர்பாராத செலவினங்கள், அடிக்கடி பயணிப்பவர் காப்பு, கோமா காப்பு, அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் கவர் ஆகியவற்றைப் பூர்த்தி செய்கின்ற க்ரூஸ் பண்டில், டிராவல் ப்ளஸ் பண்டில், ஆக்சிடண்ட் பண்டில் ஆகிய 3 ஆட்-ஆன் தொகுப்புகளிலிருந்து வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம்.

இந்த புதிய டாடா ஏஐஜி டிராவல் கார்ட் பிளஸ் பற்றிப் பேசுகையில், டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் இன் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி சௌரவ் ஜெய்ஸ்வால், டாடா ஏஐஜி இல் டிராவல் கார்ட் பிளஸ் திட்டத்தின் அறிமுகத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது அனைத்தையும் உள்ளடக்கிய காப்பீட்டுத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு  நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. எங்களின் டிராவல் கார்ட் பிளஸ் காப்பீட்டின் மூலம், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பைப் பயணிகள் கொண்டிருப்பதால் உறுதியான உணர்வுடன் தங்கள் சாகசங்களை அவர்கள் மேற்கொள்ளலாம். ஒவ்வொரு பயணிகளின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட மன அழுத்தமில்லாத அனுபவத்தை வழங்குவதில் எங்கள் முக்கியத்துவம் உள்ளது” என்று கூறினார்.