வேளாண் பல்கலையில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நாள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை “போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி” வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறை துணை ஆணையர் ரவிக்குமார், காவல்துறை உதவி ஆய்வாளர் சுகுமாரன் மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

காவல் துறை துணை ஆணையர் பேசுகையில், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீயவிளைவுகள் அவற்றால் சமுதாயத்திலும், குடும்பத்திலும் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை முதன்மையர் வெங்கடேசபழனிச்சாமி, பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பயிலும் மாணவ, மாணவியர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து, வேளாண்மைப் பல்கலை வளாகத்தில் மாணவ, மாணவியர்கள் கையில் பதாகையுடன் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.