ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியுடன், ஐ.பி.எம். நிறுவனம் இணைந்து புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

இந்த ஒப்பந்தமானது கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான இடைவெளி குறைந்து, மாணவியர் வேலை வாய்ப்புக்குத் தேவையான திறன்களைப் பெற முடியும்., எனக் கல்லூரி முதல்வர் சித்ரா தெரிவித்தார்.

இதில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி மற்றும் ஐ.பி.எம் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.