கோவையில் மாற்று மின் இணைப்பை வழங்க கோரி மனு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் சார்பாக 12 கிலோ வாட்ஸிக்கு மிகாமல் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கு எல்டி- 3பி லிருந்து மாற்றி எல்டி-3எ1 மின்இணைப்பை உடனடியாக வழங்க கோரி கோவை மின் பொறியாளருக்கு மனு அளித்தனர்.

தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான உற்பத்தி துறைச்சார்ந்த குறுந்தொழில் நிறுவனங்கள் குடிசை மற்றும் குறுந்தொழில் கூடங்களாக இயங்கி வருகிறது.

12 கிலோவாட்டுக்கு கீழ் மின்இணைப்பு பெற்று இயங்கும் தொழில் பிரிவினருக்கு உதவுகின்ற வகையில் – எல்டி-3எ1 மின் வழங்குவதற்கு இணைப்பை மின்சா வாரியத்தின் தமிழ்நாடு ஆணையிருந்தும், கோவையில் எல்டி- 3பி மின் இணைப்பிலிருந்து எல்டி-3எ1 மாற்றுவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளாமல் குறுந்தொழில் முனைவோர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கக்கப்பட்டு வருகிறது.

மேலும், 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின்இணைப்பை பயன்படுத்த எல்டி-3எ1 பெறுவதற்கு தகுதி இருக்கும் தொடர்ந்து குறுந்தொழில் முனைவோர்களுக்கு தொடர்ந்து மின்சார வாரியம் கொடுக்க மறுத்ததால் தகுதி வாய்ந்தகுறுந்தொழில் நிறுவனங்கள்ஆயிரக்கணக்கான ரூபாயை கூடுதலாக மின்கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இதனால் குறுந்தொழில்களின் உரிமைகளை பறிக்கப்படுவதுடன் பொருளாதார நெருக்கடிக்கும் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்நிலை மாறுவதற்கும் குறுந்தொழில்களை பாதுகாப்பதற்கும் மின்சார வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 கிலோ வாட் அதற்கு கீழும் மின் இணைப்பு பெற்றுள்ள தொழில் முனைவோர்கள் எல்டி- 3பி – யிலிருந்து எல்டி-3எ1 யின் கீழ் மின் இணைப்பை மாற்றி தர கோரும் விண்ணப்பங்களை

எவ்வித நெருக்கடிகளுக்கும் உட்படுத்தமால் உடனடியாக அவர்களுக்கு மின் இணைப்பை வழங்குமாறு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத் தலைவர் கேட்டுக் கொண்டார்.