மாணவிகள் ஆளுமையையும், துணிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்

-சுதர்சன் ஜெயராமன் பேச்சு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியருக்கான ஒருங்கிணைப்பு விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்ரா, கல்லூரியின் சாதனைகளையும் மாணவியரின் வெற்றிகளையும் குறிப்பிட்டு, மாணவிகளை வாழ்த்தி வரவேற்றார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ப்ரோடிவிடி நிறுவனத்தின் தொழில்நுட்ப சுதர்சன் ஜெயராமன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் நிர்வாக அறங்காவலர் பேசுகையில், மாணவிகள் அனைவரும் கல்விக்கும், பயிற்சிக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து, தங்களை உயர்த்திக் கொள்வதோடு தலைமைப் பயிற்சிகளையும் இந்த கல்லூரி வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டும். என்றார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவிகள் தங்களுக்கான குறுகிய கால, நீண்ட காலக் குறிக்கோள்களைத் தீர்மானிப்பதோடு கவனம் சிதறாமல் லட்சியங்களை நோக்கித் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எந்தத் துறையாக இருந்தாலும் சமீபகாலத் தொழில்நுட்ப வசதிகள், மாற்றங்கள், முன்னேற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு அவற்றைக் கற்றுக்கொள்வதால் மற்றவர்களிடமிருந்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள முடியும். துறை சார்ந்த அறிவோடு வாழ்க்கைத் திறன்களையும் தங்கள் ஆளுமையையும், துணிவையும் மாணவிகள் வளர்த்துக்கொள்வதோடு தொடர்ந்து பயிற்சி செய்வதும் அத்தியாவசியமானது என்று மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் பேசினார்.

இறுதியை இந்நிகழ்வில் கல்லூரியின் ஹெல்த் கிளப் சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மூலம் பார்வையாளர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.