சாதி, மத விவரங்களைக் குறிப்பிடும்படி பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்

கோவையில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேட்டில் சாதி மத விவரங்களைக் குறிப்பிடும்படி கட்டாயப்படுத்துவதை தடை செய்யும் விதமாக தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி திராவிட விடுதலைக் கழகத்தினர் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திராவிடர் விடுதலைக் கழகம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவையில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வீட்டுப்பாடக் குறிப்பேட்டில் சாதி, மத  விவரங்களை குறிப்பிடும்படி மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர். சாதி, மத அடையாளங்களை பள்ளி மாணவர்களின் விவரக் குறிப்பேட்டில் வெளிப்படையாக குறிப்பிட வைப்பது மாணவர்களிடையே தீண்டாமை உள்ளிட்ட பாகுபாடு உணர்வுகளை தூண்டும். எனவே, இதனை தடை செய்யும் விதமாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.