புரோசோன் மாலில் சமஷ்டி சர்வதேச பள்ளி சார்பில் கலைநிகழ்ச்சிகள் 

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு புரோசோன் மாலில் ஜீலை 1ஆம் தேதி சனிக்கிழமை தெரு கூத்து நிகழ்ச்சி 2.0 (Nukkad Naatak 2.0) மற்றும்  ஃபிளாஷ் கும்பல் நடன நிகழ்ச்சி (flash mob ) கொண்டு பொது மக்கள் முன்னிலையில் சமஷ்டி சர்வதேச பள்ளி மாணவரகள் பயமின்றியும், பதட்டமின்றியும், தனி மனித ஆரோக்கியத்தைப் பற்றியும், மருத்துவப் பணிகளின் வகைகள் பற்றியும், தன் சுத்தம் பற்றிய  விழிப்புணர்வையும் முன்னிறுத்தினர். பின்னர், மருத்துவர்களையும், அவர்களின் தன்னிகரற்ற சேவைகளையும் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினர்.

மேலும், இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுவேதா மந்தேனா, இயக்குனர்கள் நவீன் மெஹ்தா, மீரா அரோரா மற்றும் பள்ளி முதல்வர் தீபா தேவி, ஆசிரியர்கள் மற்றும் எல்லா பணியாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.