கொங்குநாடு கல்லூரியில், திருநங்கைகளுக்கான கழிவறை திறப்பு!

கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் திருநர் சமூகத்தை மேம்படுத்தும்

நோக்கில்  அவர்களை ஆசிரியர் மற்றும் அலுவலர் பணிகளில் நியமித்து வருவது

குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருநங்கைகளுக்கான கழிவறை வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி

வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதனை பாரதியார் பல்கலைக்கழகத்தின்

துணைவேந்தர், பொறுப்புக்குழு உறுப்பினரும், சமூகப் பணித்துறையின் பேராசிரியர் மற்றும்

தலைவருமான லவ்லினா லிட்டில் ஃப்ளவர் திறந்து வைத்தார்.

கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர்  சி.ஏ. வாசுகி தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் லச்சுமணசாமி முன்னிலை வகித்தார்.மேலும், தமிழ்த்துறை

உதவிப் பேராசிரியர் திருநங்கை பத்மினி பிரகாஷ் மற்றும் அலுவலக உதவியாளர் திருநங்கை

சாரா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.