கோவை சிறை கைதிகளுக்கு வாரத்தில் 2 நாள் சிக்கன்.

சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே இருக்கும் விதிகளின்படி, சிறை கைதிகளுக்கு கஞ்சி, உப்புமா, சட்னி, பொங்கல், அரிசி சாதம், சாம்பார் ஆகியவை வழங்கப்படுகின்றன

வாரத்தில் ஒரு நாள் மட்டும் சிக்கன் வழங்கப்படுகிறது.இதில் மாற்றங்கள் செய்ய தமிழக அரசின் சிறைத்துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, சென்னை புழல் சிறையில் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. புதிய உத்தரவுபடி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை கோதுமை உப்புமா, தேங்காய் சட்னி மற்றும் கடலை சட்னி வழங்கப்படும். மதியம் அரிசி சாதம், ரசம், காய்கறி கூட்டு, மாலை டீ, சுண்டல், இரவு வேளையில் அரிசி சாதம், சாம்பார் வழங்கப்படும்.சைவம் சாப்பிடுவோருக்கு மதியம் உருளைக்கிழங்கு கறி, ரவா கேசரி, வாழைப்பழம், கொய்யாப்பழமும், அசைவம் சாப்பிடுவோருக்கு சிக்கனும்வழங்கப்படும்.

இதே நடைமுறை புதன்கிழமையும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

திங்கள் காலை- பொங்கல், சாம்பார், செவ்வாய்- ராகி உப்புமா, புதன்- தக்காளி சாதம், வியாழன்- எலுமிச்சை சாதம், வெள்ளி- இட்லி, சனிக்கிழமை-புதினா சாதம், முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவு சப்பாத்தி வழங்கவும் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் வேர்க்கடலை வழங்கியதற்கு மாற்றாக, சுண்டல், வேர்க்கடலை, பச்சைப்பயிறு, காராமணி என மாற்றி மாற்றி வழங்கவும் சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.