போத்தனூர் ரயில் நிலையத்தில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவர் திருமதி காமினி IPS அவர்கள் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் திரு பாலாஜி அவர்கள் ரயில்கள் மூலம் அரிசி கடத்தும் நபர்களை பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் 05.06.2023 தேதி காலை 08.00 மணிக்கு கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் சோதனை செய்தபோது நடைமேடை 3 ல் அடுக்கி வைத்திருந்த சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி அதனை ரயிலில் கடத்த தயாராக இருந்த 1) அமுதா வயது 40 க/பெ மாரப்பன், நியூ சித்தாபுதூர் கோயம்புத்தூர்.

2) ஜோதி வயது 62 க/பெ மரிய ஜோசப், சுண்ணாம்புக்கல் தோடு வேலந்தாவளம் கேரளா ஆகிய இருவரையும் விசாரணை போத்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசிகளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா செல்லும் ரயில்கள் மூலமாக கேரள கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டதன் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.