ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் துறையும் இணைந்து “புகழ்பெற்ற கலாச்சாரங்களில் பெண்கள்” என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கை நடத்தினர்.

கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் துறைத்தலைவர் நாகராஜ் “கலாச்சாரங்களில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஆங்கிலத்துறையில் உதவிப்பேராசிரியராக பணிபுரியும் கார்த்திகா “புகழ்மிக்க கலாச்சாரங்களை உருவாக்குவதில் மரபுகளைப் புனரமைத்தல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள பிஜேஎம் அரசு கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறையின் இணைப்பேராசிரியர் மினி பாபு “பெண் கவிஞர்களின் பங்கு” என்ற தலைப்பிலும், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் சங்கர் “இந்தியாவில் நடிகைகள் மற்றும் திரைக்குப் பின்னான அவர்களுடைய பங்களிப்பு – நேர்காணல்கள் வாயிலான ஆய்வு” என்ற தலைப்பிலும், கோவை இக்னைட் அகாடமி மற்றும் சார்வா ஹேப்பினஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிந்து கல்யாணசுந்தரம் “இங்கே அங்கே எல்லா இடங்களிலும் நமக்குத் தெரிந்த பெண்கள்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.