கோவாவில் ரோட்டரி கிரிக்கெட் போட்டி: கோவையை சேர்ந்த அணி பங்கேற்பு

கோவாவில் நடைபெறவுள்ள ஐஎப்சிஆர் (சர்வதேச கிரிக்கெட் விரும்பும் ரோட்டரியன் பெலோஷிப்) கிரிக்கெட் போட்டியில் கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் 12 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.

பிப்ரவரி 23 முதல் 26 ஆம் தேதி வரை இந்த கிரிக்கெட் போட்டி நடக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து 16 அணிகள் பங்கேற்கின்றன. அகில இந்திய அளவிலான இந்த பெலோஷிப் போட்டியை முதல் முறையாக கோவா ரோட்டரி மாவட்டம் 3170 நடத்துகிறது.

சென்னை, மும்பை, டில்லி, ஹசன், ஹப்ளி, சேலம், நாசிக், கொல்கத்தா, மற்றும் பெங்களுருவை சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்கின்றன. 3 ஆண்டு இடைவெளிக்கு பின் நடக்கும் போட்டியில் 300 க்கும் மேற்பட்ட ரோட்டரியன் பங்கேற்கின்றனர். கோவையின் அணிக்கு சுமித்குமார் பிரசாத் தலைமை ஏற்கிறார்.

பிரபாகர், வசந்த், ஸ்ரீனிவாசன், மணிகண்டன், ராஜா, ஜெயராஜ், தனபால், கண்ணன், மார்க், மதன் மற்றும் சைலேஷ் ஆகியோர் ரோட்டரி கிளப் சார்பில் பங்கேற்கின்றனர். இந்த அணியினர் பிப்ரவரி 22 ல் கோவா புறப்படுகின்றனர்.