பி.எஸ்.ஜி அறநிலையத்தின் 97வது நிறுவனர் தின விழா

பி.எஸ்.ஜி அறநிலையத்தின் 97வது நிறுவனர் தின விழா புதன்கிழமையன்று கோவை பீளமேடு பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தினேஷ் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் கோவை, மணி மேல்நிலைப்பள்ளியின் செயலாளரும் மற்றும் தலைமை ஆசிரியருமான கே.சத்தியநாராயணன், ஈரோடு, சம்பந்தம் மில்ஸின் நிர்வாக இயக்குனர் கே.அருணாச்சலம், ஐதராபாத், இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெடின் நிர்வாக இயக்குனர் கே.ஆனந்த் குமார், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை, காலிடை மோட்டார் ஒர்க்ஸின் தலைமை நிர்வாகி பார்கவ் சுந்தரம், கேரள, எம்.இ.எஸ் அகாடமி ஆஃப் மெடிக்கல் சைன்ஸின் டீன் கிரிஷ் ராஜ் மற்றும் பீகார், எய்ம்ஸ் நர்சிங் கல்லூரியின் முதல்வரும் தலைமை செவிலியர் அதிகாரியுமான ரதீஷ் நாயர் ஆகியோருக்கு பி.எஸ்.ஜி-யின் சிறந்த முன்னாள் மாணவர்கள் விருது வழங்கப்பட்டது.

இதில் பி.எஸ்.ஜி அறநிலைய அறங்காவற்குழுவினர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.