பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கிரிக்கெட் போட்டி

பி.எஸ்.ஜி அறநிலையத்தின் சார்பில் அதன் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ‘பணியாளர்கள் தினம்’ ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பி.எஸ்.ஜி நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிப்பவர்களுக்கான ‘செலிப்ரிட்டி கிரிக்கெட்’ போட்டி பீளமேடு பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் புவனேஷ்வரன் மற்றும் பி.எஸ்.ஜி இண்டஸ்ட்ரியல் இன்ஸ்டிடியூட் சீனியர் மேனஜர் ரகுபதி தலைமையிலான 2 அணியினர் போட்டியில் பங்கேற்றனர்.

பி.எஸ்.ஜி அறநிலையத்தின் அறங்காவலர் கோபால கிருஷ்ணன் போட்டியை துவக்கி வைத்தார்.

பி.எஸ்.ஜி தொழில் நுட்பக்கல்லூரியின் முதல்வர் பிரகாசன், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பிருந்தா மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நிறுவிய பேராசிரியர் ஜி.ஆர். தமோதாரன் பிறந்தநாளை (பிப்.,20, 1914) நினைவு கூரும் வகையில் பி.எஸ்.ஜி அறநிலைம் பணியாளர்கள் தினத்தை நடத்துகிறது.

பணியாளர் தினத்தையொட்டி பி.எஸ்.ஜி நிறுவனங்களில் பல விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.