உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஆர். வி கல்லூரி மாணவர்

டாக்டர்.ஆர். வி.கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயிலும் மாணவன் முகிலன், பென்சில் ஓவியம் வரைந்து கலாமின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் உருவப்படத்தை 24,091 வட்டங்களில் வரைந்து பத்து மணி நேரம் 50 நிமிடங்களில் ஓவியத்தை முடித்து சாதனை செய்துள்ளார். இதற்கான சான்றிதழை சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் உலக சாதனை அமைப்பு வழங்கியது.

சாதனை பெற்ற மாணவனை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், அறங்காவலர் சுந்தர், கல்லூரி முதல்வர் ரூபா, கல்லூரியின் நிர்வாக மேலாளர் சீனிவாசன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.