கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் குடியரசு தின விழா

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 74 வது குடியரசு தின விழா கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலின்படி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சி பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கீதா ஆகியோர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக இந்தியன் எகனாமிக், ஓய்வு ,மதிசேகரன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.

இரு கல்லூரிகளின் 2 டி என் விமான படைப்பிரிவு, 4 டி என் பாட்டலியன், 5 டி என் கேர்ள்ஸ் பாட்டலியன், 6 டி என் மெடிக்கல் கம்பெனி ஆகிய தேசிய மாணவர் படைபிரிவுகளை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பும், பின்னர் கலை நிகழ்ச்சிகளும், தேசபக்தி நடனம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இவ்விழாவில் இரு கல்லூரிகளின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.