குறிச்சி மைதானம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

குறிச்சி மைதானம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர், மேயர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 85க்குட்பட்ட, காந்திஜி சாலை, குறிச்சி மைதான முதல் உழவர் சந்தை வரை 50.70 இலட்சம் மதிப்பீட்டில் 650 மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள், செயற்பொறியாளர், உதவி ஆணையாளர், மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.