கே.பி.ஆர் கல்லூரியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து “அதிவேக கற்றல்” எனும் தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். கல்லூரியின் செயலர் & ஆலோசகர் இராமச்சந்திரன், ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கோமதி சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வணிகவியல் துறைப் புலமுதன்மையர் குமுதாதேவி வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கோவை, தாட்ஸ் கிளினிக் நரம்பியல் உளவியலாளர் டாக்டர் விஜயகுமார், கே.பி.ஆர் பெண்கள் நூற்பாலை நலக் கல்விப் பிரிவு முதல்வர் சரவணபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் அமர்வில் முதல்வர் சரவணபாண்டி, மாணவர்கள் படிப்பில் தமது கவனத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பயிற்றுவித்தார்.

இரண்டாம் அமர்வில் டாக்டர் விஜயகுமார், தன் அனுபவங்கள் மூலமாக மாணவர்களுக்கு நினைவுத்திறன் மேம்படுத்தல் பயிற்சி, மன அழுத்த மேலாண்மைக் கட்டுப்படுத்தலுக்கான அதிவேகப் பயிற்சிகள் குறித்து விளக்கினார். மேலும், தேர்வு பயம் தவிர்த்து எதிர்காலக்கனவு, இலட்சியங்கள் அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.