கங்கா செவிலியர் கல்லூரியில் சிறுநீரக நலம் குறித்த மாநாடு

கங்கா செவிலியர் கல்லூரி சார்பாக “சிறுநீரக சுகாதார முன்முயற்சிகளின் நடைமுறைச் சட்டம்” என்ற தேசிய மாநாடு நடைபெற்றது.

கங்கா செவிலியர் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ரமா ராஜசேகரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் எஸ்தர் ஜான் மாநாட்டின் முன்னுரையை வெளியிட்டார்.

இம்மாநாட்டில் சிறுநீரக ஆரோக்கியத் துறையில் தடுப்பு, சிகிச்சை மற்றும் முன்னேற்றங்கள் பற்றிய பலதரப்பட்ட விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ராஜசபாபதி சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேதநாயகம் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் கந்தசாமி சிறந்த சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

நேபாளத்தைச் சேர்ந்த பூர்பாஞ்சல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் பிரமிளா தாபா, சிறுநீரக நலம் மற்றும் முதியோர் பராமரிப்பு குறித்து பேசினார்.

இந்த மாநாட்டில் சிறந்த அறிவியல் கட்டுரை மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சிகள் அங்கீகரிக்கப்பட்டன. மேலும் சிறுநீரகம் பற்றிய மறைக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் கொண்ட குகை மற்றும் மாணவர்களுக்கான அறிவு பகிர்தல் விளையாட்டு ஆகியவையும் இடம்பெற்றிருந்தன.