கார்த்தி சிதம்பரம் எம்.பி பிறந்தநாள் கோவில்களில் சிறப்பு பூஜை

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் 51 வது பிறந்தநாள் (நவ 16) விழாவை முன்னிட்டு கோவையில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

அவரது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 51 திருக்கோவில்களில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாராதாம்பாள் கோவிலில் கார்த்தி சிதம்பரம் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, ஐ.என்.டி.யூ.சி. தொழிற் சங்க தலைவர் கோவை செல்வன் கலந்து கொண்டனர்.

கார்த்தி சிதம்பரம் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.