எஸ்.என்.எம்.வி கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், இளங்கலை கணினி தொழில்நுட்பவியல் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை
மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக புகையிலை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் புகையிலை ஒழிப்பு மையக் கருத்தாளர் முரளிகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில்: புகையிலை மற்றும் போதை பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் உடல் மற்றும் மனநலம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் தன்னை மட்டுமல்லாமல் தான் வாழும் சமூகத்தையும் வளமிழக்கச் செய்கின்றனர். மேலும் வாகன விபத்துகள் பெரும்பாலும் போதை பயன்பாடு உள்ளவர்களால் நிகழ்கின்றன எனப் பேசினார்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமை வகித்தார். மேலும் இதில் 450 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.